
காத்திருப்பது நிரந்தரமல்ல
காத்திருந்து நாம்
பெறுவதும் கூட..!
ஒரு புல்லிற்கு
ஒப்பிட்டு பார்த்தால்
ஒன்றுமே இல்லை மனிதன்!
இந்த உலகத்தில் திருடர்கள் ஜாக்ரதை
உன் சிரிப்பாய் நீ
ஒரு போதும்தொலைத்து விடாதே!
காற்றில் அசையும்
பெண் கூந்தலில்
தூரிகையே ஓவியமாகிறது !
இலைகள் இல்லாத கிளைகளில்
காகம் அமர்ந்து கொண்டு
வசந்த காலத்தை அழைக்கிறது !
--- zen கவி வைரபாரதி

No comments:
Post a Comment